விருதுநகரில் தன்னார்வலர்கள் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக கடை வைத்து கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மதுரையை சேர்ந்த தன்னார்வ அமைப்பான சாஜர் அறக்கட்டளை மற்றும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் சார்பில் சிறகுகள் என்ற திட்டம் மூலம் மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையை மேம்படுத்த பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது அதன் ஒரு பகுதியாக மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக கடை வைத்து கொடுத்து உதவி செய்து வருகின்றனர். தற்காக விருதுநகர் அருகே உள்ள பேராலி கிராமத்தில் அக்டோபர் 25 ம் தேதி நடைபெற்ற நிகழ்வில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கலந்து கொண்டு கடையை திறந்து வைத்து மெக்கானிக் மாற்றுத்திறனாளியான சிவக்குமார் என்பவருக்கு கடையை வழங்கினா